Friday, September 6, 2013

ஆண்ராய்டு இயங்கு தளத்தில் எப்படி தமிழ் எழுத்துக்களை படிப்பது? How to read tamil scripts in android mobiles?

         ஆண்ராய்டு அதிகபட்ச நபர்களால் விரும்பப்படும் இயங்குதளம் ஆகும். அலைபேசி வாங்குபவர்கள் முதலில் கவனிப்பதே ஆண்ராய்டு இயங்குதளமா என்றுதான்! ஆண்ராய்டு மிகவும் பிரபலமான கூகுல் நிறுவனத்தின் தயாரிப்பு.
         இலவசமாக கிடைப்பதாலும் பல நிறுவனங்களுடன் இணைந்து செயலாற்றுவதாலும் ஐ-போன் நிற்வனத்தை மிஞ்சும் அளவிற்கு வளர்ச்சிப்பெற்றுள்ளது. நமக்கு தேவை தமிழில் படிப்பதும் எழுதுவதுதான். ஆண்ராய்டு பதிப்புகளில் ஒன்றான ஐஸ்க்ரீம் சான்விச்சில்(Android 4.0 Ice cream sandwich) எந்த மாற்றமும் செய்யாமல் தமிழ் எழுத்துக்களை எழுதவும் படிக்கவும் முடியும்.
         மற்றொரு பதிப்பான ஜிஜ்ஜர் ப்ரட்’ல்(Android Gingerbread 2.3.6 ) உலவியில் Settings-> language->Auto detect என்று மாற்றுவதன் மூலம் தமிழ் இணயதளங்களை படிக்க முடியும்.
            எந்த பதிப்பாக இருந்தலும் Opera mini உலவியில் தமிழில் படிக்கமுடியும். அதற்கு நீங்கள் சில மாற்றங்களை செய்யவேண்டும்.
           படத்தில் காட்டியுள்ளபடி உலாவிக்கு சென்று config:// என்று தட்டி செல்லுங்கள்.
           power user settings திறக்கும் அதில் Use bitmap fonts for complex scripts என்ற இடத்தில் yes எனத் தேர்வு செய்து save  செய்து தமிழ் தளங்களைப் பார்க்கலாம்.

ஆண்ராய்டில் தமிழில் எழுத:       ஆண்ரய்டில் தமிழில் எழுத பல பயன்பாடுகள்(Applications) உள்ளன. அவற்றுள் சில
Tamil unicode keyboard
Tamivisai

          இந்த பயன்பாட்டை நிறுவிய பிறகு, ஆண்ராய்டில் Settings-> Language input-> Keyboard input methodes என்ற இடத்தில் இந்த பயன்பாட்டை தேர்வு செய்யவும். பிறகு திரையின் மேற்பகுதியில் Select input என்பதில் நிறுவிய பயன்பாட்டைத் தேர்வு செய்யவும். இதே போன்று சாதரன விசைப்பலகைக்கு மற்றிக்கொள்ளலாம்.
இணைய இணைப்பைக் கேட்கும் பயன்பாட்டால் நீங்கள் எழுதும் எழுத்துக்களைச் சேகரிக்க முடியும். அந்த பயன்பாட்டை தவிர்ப்பது மிகவும் நல்லது.

No comments:

Post a Comment