Sunday, December 15, 2013

அன்ரோயிட் மொபைல்களுக்கான AVG PrivacyFix அப்பிளிக்கேஷன் அறிமுகம்

 

 பிரபல ஆண்டிவைரஸ் மென்பொருள் வடிமைப்பு நிறுவனமான AVG ஆனது அன்ரோயிட் மொபைல் சாதனங்களுக்கான AVG PrivacyFix எனும் அப்பிளிக்கேஷனை அறிமுகம் செய்துள்ளது.
இதுவரை காலமும் அப்பிள் தயாரிப்புக்களில் பயன்படுத்தப்பட்டுவந்த இந்த அப்பிளிக்கேஷன் முதன் முறையாக அன்ரோயிட் சாதனங்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த அப்பிளிக்கேஷனை பயன்படுத்தி மொபைல்களின் செட்டிங்ஸ்ஸினை இலகுவாகவும், விரைவாகவும் மாற்றக்கூடியதாக இருப்பதுடன், WiFi தொழில்நுட்பம் மூலம் ஒருவரை ட்ராக் (Track) செய்வதை தடுக்கக்கூடியதாகவும் காணப்படுகின்றது.

Wise Data Recovery: அழிந்த தரவுகளை மீட்க உதவும் மென்பொருள்


கணனி வன்றட்டுக்களில் சேமிக்கப்பட்டுள்ள தரவுகளில் கோளாறுகள் ஏற்படுதல் மற்றும் அழிந்து போதல் போன்றவற்றினால் தரவு இழப்பு ஏற்படுகிறது.
இதனை தவிர்ப்பதற்கு Wise Data Recovery எனும் மென்பொருள் உதவுகின்றது.
முற்றிலும் இலவசமாகக் கிடைக்கும் இம்மென்பொருளின் மூலம் "Good", "Poor", "Very Poor", மற்றும் "Lost" என்ற அடிப்படையில் தரவுகளை வகைப்படுத்தி மீட்டுக்கொள்ள முடியும்.
வன்றட்டுக்கள் தவிர பென்டிரைவ், டிஜிட்டல் கமெரா, மெமரி கார்ட் போன்றவற்றிலிருந்தும் அழிந்த தரவுகளை மீறப்பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

தரவிறக்கச் சுட்டி - https://secure.avangate.com/affiliate.php?ACCOUNT=TNGZI&AFFILIATE=700&PATH=http://wisecleaner.com/soft/WDRSetup.exe 

நேரடி ஒளிபரப்பு சேவையை விரிவுபடுத்தும் யூடியூப்

 வீடியோக்களை பதிவேற்றுதல், பகிருதல் போன்ற சேவைகளை வழங்கிவரும் முன்னணி தளமான யூடியூப் தற்போது நேரடி ஒளிபரப்பு சேவையை விரிவுபடுத்துகின்றது.
அதாவது குறிப்பிட்ட சில விசேட பயனர்களுக்கு மாத்திரம் இதுவரையில் பல்வேறு நிகழ்ச்சிகளையும் நேரடி ஒளிபரப்பு சேவையை (Live Streaming) வழங்குவதற்கு 2011ம் ஆண்டிலிருந்து அனுமதி கொடுத்திருந்தது.
எனினும் தற்போது தமது கணக்குகளை சிறந்த நிலையில் பாதுகாக்கும் ஏனைய பயனர்களுக்கும் இந்த வசதியை வழங்க யூடியூப் முன்வந்துள்ளது.
இதனை பெறுவதற்கு ஆகஸ்ட் மாதத்திற்கு முன்னர் 1,000 பின்தொடருனர்களைக் (Followers) கொண்டிருக்கவும் வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

கூகுள் தரும் மற்றுமொரு புதிய வசதி

கூகுள் ஆனது தற்போது தனிப்பட்ட PDF மற்றும் EPUB கோப்புக்களை அன்ரோயிட் சாதனங்களிலிருந்து நேரடியாகவே கூகுள் புக் சேவையினுள் தரவேற்றம் செய்யும் வசதியினை அறிமுகம் செய்துள்ளது.
இணைய உலாவிகளின் மூலம் இவ்வசதியினை பெற்றுக்கொள்வது மட்டுப்படுத்தப்பட்டுள்ளதனால் விசேட அப்பிளிக்கேஷன் ஒன்றினை நிறுவி அதன் மூலம் கோப்புக்களை இலகுவாக தரவேற்றம் செய்துகொள்ள முடியும்.
அப்பிளிக்கேஷனை தரவிற்ககம் செய்ய - http://www.androidfilehost.com/?fid=23252070760974891