Tuesday, June 3, 2014

TATA DOCOMO பயனாளரா நீங்கள்? உங்கள் அழைப்பு மற்றும் இணையக் கட்டணங்களை முழுவதுமாக குறைக்க முடியும்!

TATA DOCOMO பயனாளரா நீங்கள்?
உங்கள் அழைப்பு மற்றும் இணையக் கட்டணங்களை முழுவதுமாக குறைக்க முடியும்!
       கீழே தரப்படும் தகவல்கள் TATA DOCOMO விதிமுறைக்கு உட்பட்டு தரப்பட்டவை எந்தவித தவறான வழிகள் அல்ல.
                  முதலில் இணைய கட்டண குறைப்பை பற்றி பார்ப்போம். TATA DOCOMO வழங்குகிறது 171ரூபாய்க்கு பணமேற்றும் போது 171 ரூபாய்(காலவரை இல்லை) மற்றும் 500MB(30 நாட்கள்). இந்த சலுகையைப் பயன்படுத்தி நாம் 500MB வாரத்திற்கு ஒருமுறை இலவசமாக பெறமுடியும்.
இலவச 500MBக்கான படிகள்:
1.        முதலில் இணைய வழியாகவோ அல்லது வியாபாரிகள் மூலமாகவோ 171ரூ. பணமேற்றி 171ரூ. மற்றும் 500MBயை பெற்றுக்கொள்ளுங்கள். இதற்கு பிறகு நீங்கள் இணையக் கட்டணம் செலுத்த தேவையில்லை.

2.        அந்த 500MB முடிந்தவுடன் Rechage செய்ய TATA DOCOMO தளத்திற்கு செல்லவும்.


3.        உங்கள் எண்ணை தட்டச்சு செய்து  “Submit”  கொடுக்கவும்.


4.       அடுத்த பக்கத்தில் Special Recharge என்பதை தெரிவு செய்யவும்.


5.        இப்போது பக்கத்தின் கடைசிக்குச் சென்று இதனை தேர்வு செய்யவும்.


6.        அடுத்தது பணம் செலுத்துவதற்கான பக்கம் தோன்றும். இதில் நீங்கள் படத்தில் உள்ளதை தெர்ந்தெடுக்கவும்.


7.        உங்கள் அலைபேசிக்கு சரிபார்ப்பு குறியீடு ஒன்று வரும்.  அதனை இந்த வலைபக்கதில் இட்டு தொடரவும்.
8.        இதே பக்கதிலேயே ஒரு சன்னல் திறக்கும்  Ok என கொடுத்தவுடன் உங்கள் பணமேற்றம் உறுதிபடுத்தபட்டதிற்கான பக்கம் திறக்கும்.
                              இதன் மூலம் உங்கள் கணக்குத் தொகையில் எந்த மாற்றமும் நேராது 171ரூ. அப்படியே இருக்கும் ஆனால் 500MB உங்களுக்கு கிடைக்கும். இந்த  “Mobile balance payment option ஐ பயன்படுத்தி வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே பணமேற்ற முடியும்  நீங்கள் பணமேற்றும் நாள் மட்டும் 171ரூ. பணம் கணக்கில் இருக்குமாரு பார்த்துக்கொள்ளவும்.

           இப்போது அழைப்பு கட்டண குறைப்பை பற்றி பார்ப்போம்.

TATA DOCOMO “GET” என்ற பயன்பாட்டினை(application for all platforms) வழங்குகிறது. இதன் மூலம் தினமும் குறைந்தபட்சம் 3 நிமிட உள்ளூர் மற்றும் வெளியூர் அழிப்புக்களை பெறலாம். இந்த பயன்பாட்டில் தினமும் 3 விளம்பரத்தை பார்பதன் மூலம் இலவச நிமிடங்களை TATA DOCOMO வழங்குகிறது. இதற்கு எந்தவித இணைய கட்டணமும் கிடையாது. இந்த நிமிடங்களை 15 நாட்கள் பயன்படுத்தலாம். மறுநாள் நீங்கள் பயன்படுத்தும் போது உங்கள் நேரம் காலவரையளவு நீட்டிக்கப்படும். இந்த பயன்பாட்டினை பதிவிறக்கம் செய்ய GET என எழுதி 52323 என்ற எண்ணுக்கு அனுப்பவும். இந்த செய்திக்கு கட்டணம் எதுவும் கிடையாது. இதை பயன்படுத்தி நீங்கள் ஏற்கனவே வைத்திருக்கும் உள்ளூர் மற்றும் வெளியூர் நிமிடங்களின் காலவரையையும் கூட நீட்டிக்கலாம். மேலும் அறிய இங்கு அழுத்தவும் TATADCOMOGET

No comments:

Post a Comment