Saturday, September 7, 2013

நோக்கியாவை வாங்குகிறது மைக்ரோசாப்ட்

உலகின் முன்னணி கைபேசி தயாரிப்பு நிறுவனமான நோக்கியாவை மைக்ரோசாப்ட் நிறுவனம் வாங்கவுள்ளது.
மிக வேகமாக மாறிவரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு நிறுவனங்கள் போட்டிப்போட தொடங்கவிட்டதால், சாம்சங், சோனி, ஆப்பிள் போன்றன நோக்கியாவின் இடத்தை ஆக்கிரமிக்க ஆரம்பித்துவிட்டது.
இந்நிலையில் நெருக்கடியான சூழலில் நோக்கியாவை வாங்க மைக்ரோசாப்ட் முடிவு செய்துள்ளது.
அதாவது 7.17 பில்லியன் டொலர்களுக்கு நோக்கியாவை வாங்குகிறது.
மேலும் நோக்கியா நிறுவனத்தின் தலைமை செயல் இயக்குனரான ஸ்டீபன் எலோப் மீண்டும் மைக்ரோசாப்டிலேயே இணைவார் என்றும் தெரிகிறது.
இவர் மைக்ரோசாப்டில் இருந்து தான் நோக்கியாவுக்குச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
மைக்ரோசாப்ட்டின் இப்போதைய தலைவரான பால்மர் விரைவில் பதவி விலக உள்ள நிலையில், ஸ்டீபன் எலோப் மைக்ரோசாப்ட்டின் தலைவாரகவும் வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது

No comments:

Post a Comment